Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியாதரன் இணைவதைத் தடுக்குமாறு மாவைக்கு அழுத்தம்!

In இலங்கை
Published: 06:08 GMT, Dec 8, 2017 |
0 Comments
1298
icon_com
This post was written by : Ravivarman
vithyadaran1

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை கட்சிக்குள் இணைப்பதைத் தடுக்குமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கடும் அழுத்தம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நியமிக்க தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் முன்னெடுக்கும் முயற்சியைத் தடுக்குமாறு கோரியே மேற்படி அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை இராப்போசனத்துக்கு நேற்றிரவு அழைத்த கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், இந்த அழுத்தத்தை வழங்கினார் எனப் பெயரை வெளிப்படுத்த விரும்பாத தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வித்தியாதரனை கட்சிக்குள் இணைத்தால் எதிர்காலத்தில் ஊடக பலத்தை தமிழ் அரசுக் கட்சி இழக்கும் நிலை ஏற்படும் என்றும் மாவை சேனாதிராசாவுக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)