Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலிபோர்னியாவை சுட்டெரிக்கும் காட்டுத்தீ- 2 லட்சம் குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

In
Updated: 06:34 GMT, Dec 8, 2017 | Published: 06:34 GMT, Dec 8, 2017 |
0 Comments
1168
This post was written by : Elakkiya

தெற்கு கலிபோர்னியாவின் சான்டியாகோ நகரின் வடக்கில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக சுமார் 2 லட்சம் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (வியாழக்கிழமை) முதல் காட்டுத்தீ வெகுவாக பரவி வருகின்ற நிலையில் சுமார் 5000 தீயணைப்பு வீரர்கள் தீயுடன் போராடி வருவதாகவும் இதுவரையில் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பகுதியில் காற்று பலமாக வீசுவதால் பத்து ஏக்கர் பரப்பளவிலிருந்து ஒருசில மணித்தியாலங்களுக்குள் 2500 ஏக்கர் பரப்பளவுக்கு  தீ பரவியதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டடங்கள் வீடுகள் என பெருமளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற அதேவேளை இதுவரை பெண் ஒருவர் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பிழம்புகள் காரணமாக வீதிகள் யாவும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் தீ காரணமாக எழும் புகைமூட்டம் வானளாவிய தூரம் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயானது மிகவும் மோசமான தீய வானிலை என்ற அடிப்படையில் மிக உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகங்கள் அனைத்து வகுப்புக்களையும் நேற்றைய தினம் ரத்து செய்திருந்தது. அதேபோன்று லொஸ் ஏஞ்சஸ்லிலுள்ள நான்கு பாடசாலைகளில் ஒன்று மூடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg