Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுரேஸ் பிரேமச்சந்திரனை தமிழ் துரோகிகள் ஏமாற்றி விட்டனர்: கஜேந்திரகுமார்

In இலங்கை
Updated: 07:21 GMT, Dec 8, 2017 | Published: 07:21 GMT, Dec 8, 2017 |
0 Comments
1532
This post was written by : Sujitharan

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் அதனை தலைமையும் ஏமாற்றப்பட்டு விட்டதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை எதிர்க்கிறோம் எனபதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கைக்கோர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

”தற்போதைய நிலையில், நிலையானதும், உறுதியானதுமான ஒரு மாற்றுத் தலைமையின் அவசியம் ஏற்பட்டுள்ளது. என்றபோதிலும் மாற்றுத் தலைமைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பொருத்தமான கட்சியல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேருக்கு மட்டும்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கின்றதே தவிர, அது தமிழரசுக் கட்சியாகத்தான் செயற்படுகிறது என்பதுதான் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குற்றச்சாட்டு.

அது ஏனைய கட்சிகளை புறக்கணிப்பதாகவும், முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் கூறி, தமிழரசுக் கட்சியின் சின்னத்திலோ பெயரிலோ போட்டியிடமுடியாது என வெளியுறியுள்ளார்.

எங்களைப் பொறுத்தவரை கொள்கைரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழைவிடுகின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக சுரேஸ் பிரரேமச்சந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்திருக்க கூடாது. இந்த தமிழர் விடுதலைக் கூட்டணியனாது. கூட்டமைப்பினைப் பார்க்கிலும் மோசமான கொள்கைகளைக் கொண்டதாகும்.

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது நாங்கள் மதிப்பு வைத்திருக்கின்றோம். அத்தகைய மதிப்பு இல்லாவிட்டால் அவர்களுடன் கூட்டுச் சேருவதற்கு இணங்கியிருக்கமாட்டோம். நாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருந்தோம்.

ஆனால் நிலைமை மாறிவிட்டது, துரதிஸ்டவசமாக தமிழ் விரோதிகளினால் சுரேஷ் பிரேமச்சந்திரன் எமாற்றப்பட்டு விடுதலைக் கூட்டணியில் இணைக்கப்பட்டுள்ளார்” என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg