Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துவரப்படுவர்: அமைச்சர் உறுதி!

In இந்தியா
Updated: 09:32 GMT, Dec 8, 2017 | Published: 07:42 GMT, Dec 8, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Kemasiya
fgfg

ஓஹி புயல் காரணமாக பிற மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துவர ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், புயலின் காரணமாக வேறு மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள தமிழக மீனவர்களை, அவர்களின் ஊர்களுக்கு மீட்டுவரும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

இதுவரையில் கொச்சியில் 128 பேர், கர்நாடகாவில் 975, குஜராத் வேராவிலில் 625 மற்றும் மகராஷ்டிராவில் 836 பேர் உட்பட, மொத்தம் 2,805 தமிழக மீனவர்கள் 5 மாநிலங்களில் பத்திரமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துவரப்படுவார்கள்.

மேலும் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் உட்பட, அனர்த்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குதல் போன்ற, அனைத்துப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)