Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு!

In இலங்கை
Published: 07:30 GMT, Dec 8, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Ravivarman

பதுளை மாவட்டத்திலிருந்து வெலிமடை பொரலந்த வழியாக ஹோட்டன் சமவெளி செல்லும் ஒஹிய பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒஹிய பிரதேசத்திலிருந்து ஹோட்டன் சமவெளி மற்றும் உடவேரிய, ஒஹிய ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் ஒஹிய ரயில்நிலையத்திற்கு அருகாமையில் வளைவுப்பகுதியில் இவ்வாறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலையினால் பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், கற்பாறைகளும் மலைகளிலிருந்து உருண்டு வருவதோடு, மரங்களும் முறிந்து விழுகின்றன.

ஹோட்டன் சமவெளி காட்டுப்பகுதியில் அதிககாற்று வீசும்பொழுது மரக்கிளைகள் முறிந்து விழுவதனால் அப்பாதையில் நடந்துசெல்லும் பாதசாரிகளை அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு வீதியை ஒரு வழி போக்குவரத்தாக சீர்செய்துள்ள போதிலும், வீதி வழுக்கல்தன்மையுடன் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.

குறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரேஒரு பேருந்து சேவை ஈடுபட்டுள்ளதுடன், அதிகமண்சரிவு காரணமாக குறித்த பேரூந்து சேவை ஒஹிய புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்திலும், ரயிலிலும் செல்லும் சுற்றுலா பிரயாணிகள் அவ்விடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஹோட்டன் சமவெளி மற்றும் உலக முடிவு ஆகியவற்றை பார்வையிடுவதற்கு குறித்த வீதியே பயன்படுத்த வேண்டியுள்ளது.

ஆகையால் மாற்றுவழிகள் இன்மையால் பயணிகள் நிதானத்துடன் பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DSC00764 DSC00759 DSC00749 DSC00748

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)