Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பின் வேட்பாளர்களை ரணில் தெரிவு செய்கிறார்-ஆனந்தசங்கரி

In இலங்கை
Published: 07:51 GMT, Dec 8, 2017 |
0 Comments
1393
icon_com
This post was written by : Ravivarman

வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு  தொடர்பாக தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,  கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை தன்மீது சுமத்துவதாக தெரிவித்த அவர், சமஸ்டிமுறை  பகிர்வினை முன்னுரிமைப்படுத்தி போட்டியிட்ட ரணிலிற்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்து,  ஒற்றையாட்சியாளராகிய மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற செய்தது இவர்கள் செய்த மிகப்பெரும் தவறு என குறிப்பிட்டார்.

எனினும் இவ்விடயங்கள் தொடர்பாக  கஜேந்திரகுமார் போன்று அவர் மீதுள்ள பல உண்மைகளை கூற முடியும். ஆனால் தான் அதை விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தற்போது ரணில் விக்ரமசிங்க இங்கு வேட்பாளர்களை நியமிக்கும் அளவிற்கு எமது அரசியல் நிலை காணப்படுகின்றது. அவை தொடர்பாக  கதையுங்கள்.  பொய்யான கருத்துக்களை கூறி எமது கட்சியையோ அல்லது என் மீது கரிபூசும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)