Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா. உயர்மட்ட அதிகாரி சந்திப்பு

In உலகம்
Updated: 10:38 GMT, Dec 8, 2017 | Published: 08:00 GMT, Dec 8, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Elakkiya

ஐ.நா. அரசியல் விவகார தலைவர் ஜெஃப்ரி பெல்ட்மன் மற்றும் வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி-யொங் கோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) பியோங்யாங்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பான காணொளியை வடகொரிய அரச தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியில் இருவரும் கைலாகு செய்வதும் சட்டமன்றில் அமர்ந்திருப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

எனினும் மேற்படி சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முன்னாள் மூத்த அதிகாரியான பெல்ட்மன், ஐந்து நாள் விஜயமாக கடந்த செவ்வாய்க்கிழமை பியோங்யாங் சென்றிருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் வடகொரியாவுக்கு விஜயம் செய்யும் ஐ.நா. உயர்ட்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)