Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர். தேர்தலில் பண மோசடிகளை தடுக்க வேண்டும் : ஸ்டாலின்

In இந்தியா
Updated: 09:29 GMT, Dec 8, 2017 | Published: 08:01 GMT, Dec 8, 2017 |
0 Comments
1263
This post was written by : Kemasiya

நான் மேயராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை என்ற முதல்வரின் கருத்து தவறானது என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த அவர், “பல அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பில் நான் அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளேன். ஓ.பி.எஸ் மற்றும் ஏனைய அமைச்சர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோன்று இடம்பெறவுள்ள ஆர்.கே.நகர். தேர்தலில் பண மோசடிகள் இடம்பெறாமல், நேர்மையான முறையில் தேர்தல் இடம்பெற வேண்டும். நான் மேயராக பதவியேற்றதும் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி ஆர்.கே.நகரில் தான்” என, அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg