Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதிரைக்காகச் சண்டையிடுபவர்களால் தீர்வு இல்லை

In இலங்கை
Updated: 08:32 GMT, Dec 8, 2017 | Published: 08:32 GMT, Dec 8, 2017 |
0 Comments
1249
This post was written by : Ravivarman

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைக் கவனத்தில் எடுக்காது, தமது ஆசனப் பங்கீட்டுக்காக சண்டையிடுபவர்களால் எமக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமை தினம் எனவும், அதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அனைவரும் இணைந்து யாழில் போராட்டம் ஒன்றை எற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல்வாதிகளை நம்பி தாம் ஏமாந்துள்ள நிலையில் தாமே குறித்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டி உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைகளை சர்வதேசத்திலிருக்கின்ற பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும், எமது புலம்பெயர் உறவுகளும் எமக்கான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு வழிவகைகளைச் செய்யவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தாம் இம்முறை எவருக்கும் வாக்களிப்பதில்லை எனவும், இனிமேலும் இவ்வாறான தலைவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg