முயன்றால் முதல் நிலை! இலங்கையை துவைத்தெடுக்குமா இந்தியா?
This post was written by : Sujitharan

ஒரு நாள் போட்டித் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவை பின்தள்ளி இந்தியா, மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை முழுமையாக வெற்றி கொண்டால், இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும்.
ஒருநாள் போட்டி தரவரிசையில், தென்ஆப்பிரிக்காவும், இந்தியாவும் தலா 120 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும், சதம புள்ளிகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் திகழ்கிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 எனக் கைப்பற்றியுள்ள நிலையில், எதிர்வரும் 10 ஆம் திகதி ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.