Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சத்தான கொத்தமல்லி இலை ரசம் செய்யும் முறை!

In
Published: 09:34 GMT, Dec 8, 2017 |
0 Comments
1309
icon_com
This post was written by : Anojkiyan
Ginger-Rasam (1)

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி இலை – ஒரு கட்டு
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் -4
மிளகு – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கடுகு – அரை தேக்கரண்டி
மஞ்சள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 நெட்டு

செய்முறை

முதலில் கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைக்கவும். புளியை ஒரு கப் நீரில் கரைத்து வைக்கவும். மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்தமிளகாய் 2 சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். தக்காளியை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

இவை அனைத்தையும் தயார் செய்து வைத்ததன் பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை கிள்ளிப்போடவும். பின்பு கொத்தமல்லி இலையைப் போட்டு வதக்கவும். இலை வதங்கி வரும் பொழுது மஞ்சள் சேர்க்கவும்.

பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு போடவும். தண்ணீர் கொதித்து வரும்பொழுது புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும். புளிக்கரைசல் கொதித்து வரும்போது அரைத்து வைத்த விழுதினைச் சேர்க்கவும். அது கொதித்து வரும் பொழுது தக்காளிக் கரைசலைச் சேர்க்கவும். ஒரு கொதிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சுவையான கொத்தமல்லி இலை ரசம் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)