Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சியமைப்பது தொடர்பாக மெர்க்கலுடன் பேச தயார்: மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி

In ஐரோப்பா
Updated: 09:34 GMT, Dec 8, 2017 | Published: 09:32 GMT, Dec 8, 2017 |
0 Comments
1133
This post was written by : Elakkiya

ஜேர்மனியின் மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி, முன்னாள் கூட்டணி பங்காளியான ஜேர்மனிய தலைவர் அங்கெலா மெர்க்கலின் மைய வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயகவாத கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளது.

ஜேர்மனியில் ஆட்சியமைபப்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் மெர்க்கலுக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையை பெறாத நிலையில் மெர்க்கலின் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக இடம்பெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் நிறைவடைந்தது. இதன்காரணமாக ஜேர்மனியில் புதிய அரசாங்கம் அமைப்பதில் தொடர்ந்தும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், தேவை ஏற்படின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் என அங்கெலா மெர்க்கல் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மைய வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக கட்சியுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவற்கு தயார் என மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு விரும்பவில்லை என கட்சியின் தலைவர் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில், அங்கெலா மெர்க்கலின் பழமைவாத கட்சி மற்றும்  கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்த நிலையில், 246 இடங்களையே அந்த கூட்டணி கைப்பற்றியது.

அதே நேரம், அகதிகளுக்கான அடைக்கலம் தொடர்பான விவகாரத்தில் மெர்க்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழமைவாத கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பாகவே விலகிய மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி 153 இடங்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg