Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி சபைகளை மோசடிகளில் இருந்து மீட்டு எடுப்போம்: ஜே.வி.பி

In இலங்கை
Published: 09:28 GMT, Dec 8, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Ravivarman
08-12-2017 jvp news (1)

யாழ்.மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தினை மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று (வெள்ளிக்கிழமை) செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக    மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில்,

‘யாழ்.மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் வலி.மேற்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கான கட்டுப்பணத்தினை இன்றைய தினம் செலுத்தி உள்ளோம்.

மேலும் மூன்று சபைகளுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தவுள்ளதுடன், மக்கள் விடுதலை முன்னனியினரான நாம் லஞ்ச ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட உள்ளோம்.

கடந்த காலத்து உள்ளூராட்சி சபைகள் ஊழல் இலஞ்சம் நிறைந்து காணப்பட்டன. அதில் இருந்து உள்ளூராட்சி சபைகளை மீட்டு எடுப்போம்.

அரசியல் களியாட்டத்தில் கடந்த காலத்தில் நாட்டின் விடுதலைக்காக கொள்கைக்காக போராடினோம் என கூறியவர்கள் இன்று பதவிக்காகவும் கதிரைக்காகவும் தமக்குள் மோதிக்கொள்கின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)