Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘நடிகையர் திலகம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

In சினிமா
Updated: 09:32 GMT, Dec 8, 2017 | Published: 09:32 GMT, Dec 8, 2017 |
0 Comments
1113
This post was written by : Vithushagan

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எடுக்கப்படுகின்ற ‘நடிகையர் திலகம்’  திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்திசுரேஷ்சும், ஜெமினி கணேசனாக, துல்கர் சல்மானும் நடித்து இருக்கிறார்.

மேலும் நடிகை சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் அலுரிசக்ரபாணி என்ற கதாசிரியர் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பு அடங்கிய வீடியோ ஒன்று சாவித்ரியின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவின் முடிவில் படம் அடுத்த ஆண்டு (2018) மார்ச் 29-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg