Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த கட்டம்நோக்கி நகரும் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள்!

In
Updated: 11:27 GMT, Dec 8, 2017 | Published: 10:07 GMT, Dec 8, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Elakkiya
00ac2072-6595-4b65-9cd2-46e3eb67f3b4

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் பிரெக்சிற்றில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பிரெக்சிற்றுக்கு பின்னரான பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் உறவுமுறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜேன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து பேசிய பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, அயர்லாந்திலும், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய குடிமக்கள் மத்தியிலும் கடுமையான எல்லை இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜேன் கிளவுட் ஜங்கர், “சில மாத பேச்சுவார்த்தைகளின் பின்னர் எமக்கு தேவையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம்”  என்றும் தெரிவித்துள்ளார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)