Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

In இலங்கை
Published: 09:57 GMT, Dec 8, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Ravivarman

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில், சட்டத்தரணி நடராஜா காண்டீபன், அந்தோனி சகாயம் ஆகியோர் இன்று நண்பகல்  12.05 மணியளவில் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகரசபை, மன்னார் பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை, முசலி பிரதேசசபை, மாந்தை மேற்கு பிரதேசசபை, மடு பிரதேசசபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காகவே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,

“சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்த கூட்டு அணி சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஒரு நகரசபை மற்றும் 4 பிரதேசசபை உள்ளடங்கலாக ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல, வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

DSC_0007 DSC_0002

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)