Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையக மக்களை மானத்தோடு வாழவைத்தவர் ரணில் : வடிவேல் சுரேஸ்

In இலங்கை
Updated: 12:23 GMT, Dec 8, 2017 | Published: 09:57 GMT, Dec 8, 2017 |
0 Comments
1173
This post was written by : Arul Jesu

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே மலையக மக்களை மானத்தோடும், மரியாதையோடும் நடத்திய ஒரே தலைவர் என பதுளைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம், தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், டிரஸ்ட் என்ற நம்பிக்கை நிதியத்தின் ஊடாக தற்போதைய அரசாங்கத்திலேயே உரிய பயன்கிடைக்க பெறுவதாக கூறினார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் இனவாதமற்ற நோக்கில் குறுகிய காலத்திற்குள் மலையகத்தில் தனிவீடுகளை அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக மண்சரிவுக்குள்ளான பூனாகலை அம்பிட்டிகந்த பிரதேசத்தில் 152 வீடுகளை அமைப்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg