Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!

In சினிமா
Published: 10:17 GMT, Dec 8, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Vithushagan

டிக் டிக் டிக்’ படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கிடையே ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

ஜெயம் ரவியின் 24ஆவது படமாக உருவாகும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

டிசம்பரில் தொடங்கும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு மார்ச் வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு ஜெயம் ரவி சங்கமித்ரா பிரமாண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)