Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷின்டோ வழிபாட்டு ஆலயத்தில் பெண் பாதிரியார் வெட்டிக் கொலை

In உலகம்
Updated: 10:54 GMT, Dec 8, 2017 | Published: 10:54 GMT, Dec 8, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Elakkiya
shik

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள ஷின்டோ வழிபாட்டு ஆலயத்தில் பாரம்பரிய ஜப்பானிய வாளால் வெட்டி மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். டோக்கியோவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான டொமியோகா ஹசிமங்கில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தின் பிரதான பாதிரியாரான 58 வயதான நகாகோ டொமியாகோ என்பவர் அவருடைய இளைய சகோதரரால் தாக்கப்பட்டதாக கியோடோ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் கொலையாளியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அதற்கு முன்னதாக நகாகோ டொமியாகோவுடன் வந்த மற்றுமொரு பெண்ணையும் குத்திக் கொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ரத்தக் கறையுடன் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பெண் பாதிரியாரின் காரின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் பாதிரியாருக்கும், கொலை செய்த அவரது சகோதரரான ஷிகென்கா டொமியாகோவிற்கும் இடையிலான நீண்டகால பகையே கொலைகளுக்கு காரணம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷின்டோ ஆலயத்தில், 1990 ஆம் ஆண்டுகளில் தனது தந்தைக்கு பின்னர் டொமியோகா தலைமை பாதிரியாராக இருந்துள்ளார். எனினும், 2001 ஆம் ஆண்டு இவர் பதவி நீக்கப்பட்டு மீண்டும் அவரது தந்தையே முக்கிய பாதிரியாராக பதவியேற்றார்.

அதனையடுத்து, தனது மகளை இரண்டாவது இடத்தில் அவர் பணியமர்த்தினார். 2010 ஆம் ஆண்டு அவர்களது தந்தை ஓய்வு பெற்ற காரணத்தினால் சகோதரி நகாகோ டொமியாகோ தலைமை பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக, கொலையாளி என்று கருதப்படும் டொமியாகோ மற்றும் அவரது சகோதரிக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஷின்டோ என்பது ஜப்பானில் சிலர் பின்பற்றக்கூடிய மதம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)