Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“சாதனை படைப்போம்” – இந்தியா அணியை முழுமையாக நம்புகிறார் டிராவிட்

In கிாிக்கட்
Updated: 10:34 GMT, Dec 8, 2017 | Published: 10:31 GMT, Dec 8, 2017 |
0 Comments
1535
This post was written by : Sujitharan

தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அங்கு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும் என, இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய – தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர் சர்வதேச மட்டத்தில் சகலராலும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு தொடராக மாறியுள்ளது.

பலரது எதிர்ப்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் கொண்டுள்ள இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்த போதே, டிராவிட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”தற்போதுள்ள இந்திய அணியில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும், உலகத் தரம்வாய்ந்த சுழற்பந்து விச்சாளர்களும், மிகச்சிறந்த சகலதுறை வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையினையும் இந்தியா கொண்டுள்ளது. சகல துடுப்பாட்ட வீரர்களும் நல்ல நிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

அதுமாத்திரமல்லாது அணியிலுள்ளவர்கள் 40 முதல் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினையும் கொண்டுள்ளமையினால், இந்த முறை நிச்சியம் இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் சாதிக்கும்” என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg