Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனிதாபிமானத்தை உணர்ந்த இயக்குநர் கௌதம் மேனன்!

In சினிமா
Updated: 11:22 GMT, Dec 8, 2017 | Published: 11:13 GMT, Dec 8, 2017 |
0 Comments
1247
This post was written by : Surenth

மனிதாபிமானம் தற்போது இருக்கின்றது என்பதை தான் எதிர்கொண்ட விபத்தில் தனக்கு கிடைத்த சில நல்ல மனிதர்கள் மூலம் உணர்ந்து கொண்டதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வாகன விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் இது குறித்து இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில் “என் நலன் விரும்பிய, நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் திரைப்படங்களை எடுத்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg