Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒற்றுமையுடன் செயற்பட்டால் சரித்திரம் படைக்கலாம்: சம்பந்தன்!

In இலங்கை
Updated: 13:35 GMT, Dec 8, 2017 | Published: 11:39 GMT, Dec 8, 2017 |
0 Comments
1303
icon_com
This post was written by : Vithushagan
sama

ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குழப்பநிலைமைகள் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடந்து கருத்து தெரிவித்த அவர் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்சி. இது ஒரு குடும்பம் போன்றது. குடும்பத்துக்குள் சிறுசிறு பிரச்சினைகள், தவறுகள் வருவது வழமை. இதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது.

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கூட்டமைப்பை பிளவுபடுத்த உள்ளுக்குள்ளும் வெளியிலும் சிலர் கங்கணங்கட்டிச் செயற்பட்டு வருகின்றார்கள்.

இதற்குத் துணைபோகாதீர்கள். ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம். இந்த நம்பிக்கை எனக்கு உண்டு.

எனவே, எக்காரணம் கொண்டும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டாம் என்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரிடம் நான் விநயமாகக் கேட்டுள்ளேன்.

ஆசனப் பங்கீட்டு விவகாரத்தைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம், பேச்சு நடத்தலாம் என்று அவர்களிடம் தெரிவித்தேன். தொடர்ந்து பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று அவர்களும் கூறினர்.

இந்த விவகாரம் குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் தொலைபேசியில் நான் பேச்சு நடத்தியுள்ளேன்.

இறுதி முடிவு நல்லதாக அமையும். கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் (தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட்) ஒற்றுமையுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும்” என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)