Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

In இலங்கை
Updated: 11:52 GMT, Dec 8, 2017 | Published: 11:51 GMT, Dec 8, 2017 |
0 Comments
1221
This post was written by : Vithushagan

கொழும்பின் சில பிரதேசங்களில் நாளை (சனிக்கிழமை) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை அதி­காலை 5.00 மணி வரை­யி­லும் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதற்­க­மைய ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர பிரதான வீதி, ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து உப பாதைகளிலும்  நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

ஆகவே பொது­மக்கள் நீரை தேக்கி வைத்­துக்­கொள்­ளு­மாறு நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg