Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏற்றுமதி கைத்தொழிலை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

In இலங்கை
Published: 15:19 GMT, Dec 8, 2017 |
0 Comments
1107
This post was written by : Vithushagan
Export

பெருந்தோட்டத் துறை உள்ளிட்ட ஏற்றுமதி கைத்தொழிலுக்கு முன்னுரிமையளித்து அவற்றுக்குத் தேவையான வளங்களை குறைவின்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் இன்று பிற்பகல் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேசிய தேயிலை விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் தேயிலை கைத்தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தேயிலை கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களைப் பலப்படுத்தும் நோக்குடன் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சினால் முதன் முறையாக இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் தொடந்து உரையாற்றிய அவர் “ உயர்ந்த நியமங்கள் மற்றும் தரத்துடன் ஏற்றுமதிக்கு பொருத்தமானவற்றை உற்பத்திசெய்யும் போது அதிக இலாபம் சம்பாதிக்கும் நோக்குடன் சில வியாபாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை காரணமாக எமது உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தையின் அங்கீகாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை பலப்படுத்தும் போது பெருந்தோட்டத் துறை உள்ளிட்ட ஏற்றுமதி கைத்தொழிலுக்கு முன்னுரிமையளித்து அவற்றுக்குத் தேவையான வளங்களை குறைவின்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கடந்த இரண்டு வருடங்களைப் போன்று இவ்வருட வரவுசெலவுத்திட்டத்திலும் அதற்குத் தேவையான ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது ” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg