Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம் குறித்த ட்ரம்பின் அறிவிப்புக்கு எதிராக பேரணி: இரண்டு பாலஸ்தீனர்கள் சுட்டு கொலை

In உலகம்
Published: 05:03 GMT, Dec 9, 2017 |
0 Comments
1157
This post was written by : Anojkiyan

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீனர்கள் நடத்திய கண்டன பேரணியில் இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பாலஸ்தீனர்கள் சுட்டு கொல்லப்பட்டதோடு, 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ட்ரம்பின் அறிப்பை ஏற்றுக்கொள்ள முடியாத பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒன்றுக்கூடி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை தடுக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது பேரணியில் ஈடுபட்டவர்கள் ட்ரம்ப் உருவப் படத்தை தீயிட்டு எரித்தனர். இதை தடுக்க முயன்ற இராணுவத்தினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதன்போது இரண்டு பாலஸ்தீனர்கள் சுட்டு கொல்லப்பட்டதோடு, 25 பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிலநாட்களுக்கு முன்னதாக, ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாகவும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியமைக்கவும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg