Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாந்தை மனித புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

In இலங்கை
Updated: 05:15 GMT, Dec 9, 2017 | Published: 05:15 GMT, Dec 9, 2017 |
0 Comments
1181
This post was written by : Arul Jesu

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி சம்பந்தமான வழக்கு மீண்டும் பிறிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தவணையிடப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலய பகுதியில் குடிநீர் குழாய்களை பொருத்துவதற்கு முனைந்த போது மனித எச்சங்கள் சில தென்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பகுதி அகழப்பட்டதுடன், சுமார் 84 மனித எச்சங்களும், மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் நோக்கில் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg