Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திசைமாறிய மீனவர்கள் லட்சதீவில் இருந்து மீட்பு!

In இந்தியா
Updated: 06:04 GMT, Dec 9, 2017 | Published: 06:04 GMT, Dec 9, 2017 |
0 Comments
1176
This post was written by : Kemasiya

ஓஹி புயலின் காரணமாக திசைமாறி லட்சதீவு கரையினை சென்றடைந்த 45 தமிழக மீனவர்களை, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொச்சிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை அழைத்து செல்லப்பட்ட இவர்களுக்கு, உடனடி நிவாரணமாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளினால் 2500 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் நாகை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை அவர்களின் குடும்பங்களிடம் சேர்ப்பதோடு, பாதிப்புக்கான அனைத்து நிவாரணங்களும் தமிழக அரசினால் வழங்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புயல் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் காணாமல்போயுள்ள நிலையில், திசை மாறி கரைசேர்ந்த மீனவர்களை கண்டறிந்து அழைத்துவரும் பணியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காணாமல்போன மீனவர்களை கண்டறியும் பணியில், கடற்படை ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg