Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பில் 15 மணிநேர நீர்வெட்டு!

In இலங்கை
Updated: 12:41 GMT, Dec 9, 2017 | Published: 12:41 GMT, Dec 9, 2017 |
0 Comments
1154
This post was written by : Ravivarman

பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக இராஜகிரிய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் 02.00 மணி முதல் நாளை அதிகாலை 05.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனடிப்படையில் மொரகஸ்முல்லை, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர மற்றும் இராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள குறுக்கு வீதிகள் அனைத்திலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg