Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம் விவகாரம்: குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளதாக எச்சரிக்கை

In உலகம்
Updated: 04:04 GMT, Dec 10, 2017 | Published: 04:04 GMT, Dec 10, 2017 |
0 Comments
1285
This post was written by : Suganthini

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமை மூலம், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் வன்முறை மற்றும் குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளதாக, அரபு லீக் வெளிவிவகார அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக அரபு லீக் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்தமை மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதற்கும் குழப்பத்துக்கும் வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிக்கு அமெரிக்கா நடுநிலையாகச் செயற்படுமென்பதை  எம்மால்  நம்ப முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீனர்களுக்கு புனித இடமாகக் காணப்படும் ஜெருசலேமை, தமது நாட்டின் தலைநகரமென்று இஸ்ரேலும், கிழக்கு ஜெருசலேம் தமது நாட்டின் தலைநகரமென்று பலஸ்தீனமும் கூறி வருகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில், இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக கடந்த 6ஆம் திகதி அறிவித்துள்ளார்.  இவரது அறிவிப்பையடுத்து, காஸா மற்றும் மேற்குக் கரையோரத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையிலேயே, அரபு லீக் வெளிவிவகார அமைச்சர்களின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg