Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் வெளியே! – உறவினர்கள் ஆதங்கம் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 09:49 GMT, Dec 10, 2017 | Published: 04:40 GMT, Dec 10, 2017 |
0 Comments
1299
This post was written by : Varshini

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் வெளியே சுதந்திரமாக நடமாடுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கள் வெளியிட்டுள்ளனர். எனினும், தாம் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இம்மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட உறவினர்களே இவ்வாறு தமது கவலையை வெளிப்படுத்தினர்.

கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி, மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்திடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்திற்குச் சென்ற உறவினர்கள், அங்கும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளித்தனர்.

தமது பிள்ளைகள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென இன்னும் நம்புவதாக தெரிவிக்கும் இம்மக்கள், ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு அவர்களை கண்டுபிடித்து தரவேண்டுமென கண்ணீருடன் கேட்டுக்கொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் ‘அரசே அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீயே பொறுப்பு கூறவேண்டும்’, ‘சிறைச்சாலைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவதை நிறுத்து’, ‘மரணச்சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்’, ‘சர்வதேசமே எமக்காக குரல்கொடு அதற்காக அழுத்தம் கொடு’, ‘எமது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும்’, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினை திறந்து சர்வதேசத்தினை ஏமாற்றாதே’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

missing perosns protest (5) missing perosns protest (4) missing perosns protest (2) missing perosns protest (1)

சர்வதேச கண்காணிப்புடன் விசாரணை இடம்பெற வேண்டும்: கிழக்கில் பேரணி

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச தலையீடு அவசியம் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, மட்டக்களப்பில் மாபெரும் பேரணியொன்று நடைபெற்று வருகின்றது.

இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இப்பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமாகியது.

இப்பேரணியில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என சுமார் 500இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் பெயர் விபரங்களை கொடுத்த போதும், நல்லாட்சி அரசாங்கமும் இவ்விடயத்தில் பாராமுகமாக செயற்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்களின் நேரடி கண்காணிப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை இப்பேரணி செல்லவுள்ளதோடு, அங்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை அரசாங்க அதிபரிடம் கையளிக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

batti missing perosn rally (1) batti missing perosn rally (4) batti missing perosn rally (5) batti missing perosn rally (3) batti missing perosn rally (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg