Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனவர்களை கண்டறிந்து தருமாறு வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்!

In இந்தியா
Updated: 05:27 GMT, Dec 10, 2017 | Published: 05:27 GMT, Dec 10, 2017 |
0 Comments
1228
This post was written by : Kemasiya

ஓஹி புயலில் காணாமல் போனவர்களை கண்டறிந்து தரும்படி கோரி, மீனவ அமைப்புக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாம்பன் பேரூந்து நிலையத்திற்கு எதிரே, நேற்று (சனிக்கிழமை) இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவ அமைப்புக்கள், மீனவப்பெண்கள் அமைப்பு, அரசியல்கட்சியினர், தீவுப் பங்குத்தந்தையினர் என, பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது காணாமல்போனவர்களை கண்டறிந்து தரவேண்டும் மற்றும் கேரளாவில் வழங்கப்பட்டதை போன்று நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும், பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிய கன்னியாகுமரியை தேசிய பேரிடர் அனர்த்த இடமாக அறிவிக்க வேண்டும், என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் மீனவர்கள் விடயத்தில் மத்திய அரசின் அசமந்தப்போக்கு கண்டிக்கத்தக்க விடயம் எனவும், மீனவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

அத்துடன் குறித்த புயலில் சிக்குண்டு இறந்தவர்களுக்கு, மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

fgfgh fghfghgj

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg