Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனவர்களை ஆழ்கடலில் தேடுமாறு மீனவர்கள் தொடர் போராட்டம்!

In இந்தியா
Updated: 07:01 GMT, Dec 10, 2017 | Published: 07:01 GMT, Dec 10, 2017 |
0 Comments
1215
This post was written by : Kemasiya

காணாமல் போன மீனவர்களை ஆழ்கடல் பகுதியில் தேடுமாறு வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் நேற்று குறித்த போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாகவும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்படை கரையோரங்களில் மட்டும் தேடுதலை மேற்கொள்வதாகவும்,  நடுக்கடலில் இறங்கி தேடும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி, நூற்றுக்கு மேற்பட்ட மீனவப்பெண்கள் கடலினுள் இறங்கி போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

அத்துடன், எங்கள் உறவுகளை மீட்கும்வரை போராடுவோம்,  உடல்களும் படகுகளும் ஆழ்கடலில் மிதப்பதாக கூறுகிறார்கள்,  அப்படியாயின் கடற்படை அது குறித்து எதுவும் தெரிவிக்காதமை ஏன்? போன்ற கோஷங்களை எழுப்பி, மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஓஹி புயலின் தாக்கத்தினால், காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்டுத் தருமாறு கூறி, மீனவர்கள் தொடர்ந்தும் போரடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg