Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

80 வருடங்களின் பின் ‘Castlecary’ ரயில் விபத்து நினைவுகூரல்

In
Published: 09:00 GMT, Dec 10, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Suganthini
tra

பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ள ரயில் விபத்துகளில், மோசமான ரயில் விபத்துச் சம்பவமொன்று 80 வருடங்களின் பின்னர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நினைவுகூரப்படுகின்றது.

கடந்த 1937ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி மாலை, ஸ்கொட்லாந்தின் Castlecary கரையோரப் பகுதியில் இடம்பெற்ற பாரிய ரயில் விபத்துச் சம்பவமே நினைவுகூரப்படுகின்றது.

எடின்பேர்க் பகுதியிலிருந்து கிளாஸ்கோ பகுதி நோக்கிப் பயணித்த பயணிகள் ரயிலொன்று, குயீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட  மற்றுமொரு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.  Castlecary பகுதியில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்தில்  சிக்கி 35 பேர் உயிரிழந்ததுடன், 179 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

உயிரிழந்தவர்களில் 7 ரயில்வே பணியாளர்களும் 8 வயதுடைய சிறுமியொருவரும் அடங்குகின்றனர்.

உரிய வேளையில் சமிக்ஞை காட்டத் தவறியமையே, இந்த விபத்துக்குக் காரணமென்று குற்றஞ்சாட்டது. இருப்பினும், மோசமான காலநிலையே இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg