Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்துடனான விதிமுறைகளை பிரித்தானியா மாற்றியமைக்க முடியும்

In
Published: 09:47 GMT, Dec 10, 2017 |
0 Comments
1073
This post was written by : Suganthini
bre

இறுதிக்கட்ட பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரித்தானியா வாக்காளர்கள் விரும்பவில்லையாயின், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு விதிமுறைகளை மாற்றியமைக்க முடியுமென, பிரித்தானியாவின் சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சரும் பிரெக்சிற் தொடர்பான வழக்கறிஞருமான மிச்சேல் கோவ் தெரிவித்துள்ளார்.

டெய்லி ரெலிகிராப் எனும் பத்திரிகைக்கு நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து பிரித்தானியா வெளியேறத் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரித்தானியப் பிரஜைகள் விரும்பவில்லையென்றால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையிலுள்ள உறவு விதிமுறைகளை மாற்றியமைக்க முடியும்’ என்றார்.

‘இருப்பினும், பிரஸ்ஸல்ஸில் கடைசியாக நடைபெற்ற பிரெக்சிற் பேச்சுவார்த்தையின்போது, பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் போதியளவான முன்னேற்றங்களை எட்டியுள்ளது. இந்நிலையில், பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக எதிர்கால வர்த்தக உறவு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர முடியும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg