Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் தொடரில் இந்தியாவிற்கு 3 தங்கப்பதக்கம்

In விளையாட்டு
Updated: 10:20 GMT, Dec 10, 2017 | Published: 10:20 GMT, Dec 10, 2017 |
0 Comments
1132
This post was written by : Puvanes

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் சமிக்சா இளையோர் பிரிவில் தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார்.

10ஆவது ஆசிய சுப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று மட்டும் 3 தங்கம் மற்றும் 3 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

பெண்களுக்கான 10 மீற்றர் தூர மற்றுமொரு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மெஹுலிகோஷ் முதலிடம் பெற்று தங்கத்தினை வென்றெடுத்துள்ளார். இதன் முலம் அவர் அடுத்தவருடம் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான இளையோர் பிரிவு 10 மீற்றர் போட்டி ஒன்றில் இந்திய அணி வீரருக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

குறித்த போட்டிகளில் இந்தியாவிற்கு இதுவரையிலும் 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் இடங்களாக மொத்தமாக 11 பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg