Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குழுவிற்கு விளக்கமறியல்!

In இலங்கை
Published: 10:35 GMT, Dec 10, 2017 |
0 Comments
1170
This post was written by : Ravivarman
mullaithivu_courts_sri_lanka_vanni_304x171_bbc

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீதும் மாங்குளம் சந்தியில் வைத்து பிறிதொரு இளைஞர் மீதும் தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்லாவிப் பகுதியில் இருந்து இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இளைஞர்களால் பாலைப்பாணிச்சந்திக்கு அண்மித்த பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து மாங்குளம் சந்திக்குச்சென்ற குறித்த குழுவினர் உணவகம் ஒன்றின் முன்பாக நின்ற இளைஞரைச் சரமாரியாகத்தாக்கி படுகாயப்படுத்திய நிலையில் குறித்த இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்து நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, மேற்படி மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg