Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு எதிராக லெபனானில் ஆர்ப்பாட்டம்

In உலகம்
Updated: 10:31 GMT, Dec 10, 2017 | Published: 10:31 GMT, Dec 10, 2017 |
0 Comments
1356
This post was written by : Suganthini

சர்ச்சைக்குரிய ஜெருசலேம் விவகாரத்தைத் தொடர்ந்து, லெபனானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 6ஆம் திகதி அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து லெபானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரக வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட வேளையில் வன்முறை வெடித்துள்ளது. இதன்போது, அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்கார்கள் தீ மூட்டி, போக்குவரத்தைத் தடைப்படுத்தியுள்ளதுடன், கல் வீச்சுத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில், குறித்த இடத்திலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை பொலிஸார் நடத்தியுள்ளனர்.

யூதர், கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாம் ஆகியவர்களுக்கு புனித இடமாக விளங்கும் ஜெருசலேமை, இஸ்ரேலும் பலஸ்தீனமும்  தமது நாடுகளின் தலைநகரமென்று கூறி வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக அறிவித்ததைத் தொடர்ந்து ஜோர்டான், துருக்கி, பிரான்ஸ், லெபனான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், வன்முறைக்கும் வழிவகுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg