Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமாதான முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்து

In ஐரோப்பா
Updated: 10:55 GMT, Dec 10, 2017 | Published: 10:55 GMT, Dec 10, 2017 |
0 Comments
1112
This post was written by : Suganthini

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்குமிடையில் சமாதான முயற்சியை முன்னெடுக்க வேண்டுமென்று அமெரிக்காவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவீடன், இத்தாலி ஆகிய நாடுகளே இந்த வலியுறுத்தலை நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ளன.

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்தமை அவசியமற்ற நடவடிக்கையெனவும் மேற்படி நாடுகள் கூறியுள்ளன.

ஜெருசலேம் தமது நாடுகளின் தலைநகரமென்று இஸ்ரேலும் பலஸ்தீனமும் கூறிவரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து, கடந்த 6ஆம் திகதி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்தத் தீர்மானத்துக்கு பலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், காஸா மீது ரொக்கட் தாக்குதல்கள்; இடம்பெற்றுள்ளதுடன், ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg