Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்சரிவு அபாயம் காரணமாக மக்கள் வெளியேற்றம்!

In இலங்கை
Updated: 11:04 GMT, Dec 10, 2017 | Published: 11:04 GMT, Dec 10, 2017 |
0 Comments
1210
This post was written by : Ravivarman

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த குடும்பங்கள் அவர்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக ஒஹிய, உடவேரிய, லைபோன் தோட்டங்களின் 120 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் தற்காலிகமாக உடவேரிய தோட்டத்தில் கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலையொன்றில் தங்க வைக்கப்பட்ட போதிலும், அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைமைகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்பதோடு, அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DSC00736 DSC00644 DSC00638

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg