Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

290 நாட்களாக தொடர்கிறது போராட்டம்: விரக்தியில் உறவினர்கள்

In இலங்கை
Updated: 11:59 GMT, Dec 10, 2017 | Published: 11:59 GMT, Dec 10, 2017 |
0 Comments
1237
This post was written by : Varshini

வவுனியாவில் கடந்த 290 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் கடந்த 290 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமது நிலை தொடர்பில், அரசாங்கத்தின் எந்தவொரு தரப்பும் ஏறெடுத்தும் பார்க்கவில்லையென உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

தமது பிள்ளைகளை காணாது தவித்துவரும் இந்நிலைதானா இலங்கையின் மனித உரிமையென கேள்வியெழுப்பிய உறவினர்கள், தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென தெரிவித்தனர்.

vavuniya missing (1) vavuniya missing (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg