Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏவுகணைப் பயிற்சியில் ஈடுபட அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் தீர்மானம்

In
Updated: 12:08 GMT, Dec 10, 2017 | Published: 12:08 GMT, Dec 10, 2017 |
0 Comments
2211
This post was written by : Suganthini

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளுக்கு மத்தியில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஏவுகணைப் பயிற்சியில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

ஏவுகணைச் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் இந்தப் பயிற்சி அமையவுள்ளதாக, ஜப்பான் கரையோர பாதுகாப்புப் பிரிவினர் கூறியுள்ளனர்.

நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் ஏவுகணைப் பயிற்சி இரு நாட்களுக்கு நடைபெறவுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஏவுகணைப் பயிற்சியில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளை நடத்தி வருகின்றது. கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி ஆறாவது அணுவாயுதச் சோதனையை வடகொரியா நடத்தியிருந்ததைத் தொடர்ந்து ஏவுகணைச் சோதனையையும் நடத்தியிருந்தது. . இதனையடுத்து, கடந்த நொவம்பர் மாதம் 29ஆம் திகதி புதிய வகையான ஏவுகணைச் சோதனையை வடகொரியா நடத்தியிருந்ததுடன், இந்த ஏவுகணை அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை கொண்டதெனவும் எச்சரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg