Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் தமிழ் – முஸ்லிம் மாநாடு!

In இலங்கை
Updated: 12:24 GMT, Dec 10, 2017 | Published: 12:24 GMT, Dec 10, 2017 |
0 Comments
1255
This post was written by : Varshini

‘வடக்கின் மக்களாக எழுவோம்’ எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு நடைபெற்றது.

இலங்கை தமிழ் – முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று மாலை இம்மாநாடு நடைபெற்றது.

இதன்போது, இரு சமூகங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை பலப்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த மாநாட்டின் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். அத்துடன், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அஸ்மின் அயூப், ஆர்னோல்ட், பசுபதிப்பிள்ளை, வடக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சர் த.குருகுலராஜா மற்றும் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், முஸ்லிம் மக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

tamil muslim conference (2) tamil muslim conference (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg