Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னில் புற்றுநோயாளர்களுக்காக உதவிய நத்தார் தாத்தாக்கள்

In
Published: 12:37 GMT, Dec 10, 2017 |
0 Comments
1084
This post was written by : Suganthini

புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில், புதிய வகையான நடவடிக்கையொன்று ஸ்பெய்ன் தலைநகரான மட்ரிட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், நத்தார் தாத்தாக்கள் போல் வேடமிட்டு, இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.  முதலில் ஆடல், பாடல்களில் ஈடுபட்ட இவர்கள் தலைநகர் மட்ரிட் வழியாக வலம்வந்து, மக்களை மகிழ்வித்தனர்.

புற்றுநோய் பற்றி’ய ஆராய்ச்சியை நடத்திவரும் இலாபம் ஈட்டாத நிறுவனமொன்றுக்கு, இவர்களின் நுழைவுக்கட்டண நிதியில் ஒரு பங்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில், சிறுவர்களும் கலந்துகொண்டனர். சிறுவர்கள் பச்சை நிறத்திலான உடை அணிந்து இதில் கலந்துகொண்டதுடன், சிலர் தங்களது செல்லப் பிராணிகளுடனும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg