Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுகுழு கூட்டத்தில் குழுப்பநிலை

In இந்தியா
Published: 14:41 GMT, Dec 10, 2017 |
0 Comments
1148
This post was written by : Arul Jesu

சென்னையில் இன்று நடைப்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுகுழு கூட்டத்தில் ஏற்பட்ட குழுப்பநிலையால் கூட்டம் இடையில் நிறைவடைந்துள்ளது.
நடிகர்களான விஷால் மற்றும் சேரன் தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தால் இந்த குழுப்ப நிலை ஏற்பட்டதாக கூட்டத்தில் கலந்துக்கொண்ட திரைபட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுகுழு கூட்டம் இன்று சென்னையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என எதிர்பார்கப்பட்டது.

எனினும் நடிகர்களான விஷால் மற்றும் சேரன் தரப்பினர்களுக்கு இடையில் நிலவிய சிறு முறுகல் நிலையால் கூட்டம் இரண்டு மணித்தியாலம் களித்து 12 மணிக்கே ஆரம்பமாகியுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் விஷாலை அந்த பதவியில் இருந்து விலகுமாறு சேரன் தரப்பினர் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர் ஆரம்பமான கூட்டத்தில் சேரனுடன் இணைந்து தயாரிப்பாளர் இராதாகிருஸ்னண் சங்க கணக்கு வழக்குகளை கோரியுதுடன், அதில் மோசடி நடத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து மேடையில் ஏறி அங்கிருந்த ஒலிவாங்கியில் மோசடி குறித்து அறிவிக்க இராதாகிருஸ்னண் முற்பட்ட போது விசால் தரப்பினர் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையில் வாய்தர்க்கம் நிலவியதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg