Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பின் ஒற்றுமை ஐ.தே.கட்சிக்கு அவசியம்: சுரேஸ்

In இலங்கை
Published: 14:32 GMT, Dec 10, 2017 |
0 Comments
1342
This post was written by : Ravivarman

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியில் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக்கட்சி தனித்து நின்று ஆட்சியமைக்க முன்வருமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்கும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிளவுபடாமல் இருந்தால்தான் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சியமைப்பதற்கு இலகுவாக இருக்குமென்பதால் கூட்டமைப்பின் ஒற்றுமையில் பிரதமர் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றார்.

கூட்டமைப்பின் பிளவுகளும் பிரிவுகளும் தனக்கு எதிர்காலத்தில் பாதிப்புக்களை கொண்டு வரும் என்பதில் உறுதியாகவுள்ள பிரதமர் கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் அக்கறை கொண்டுள்ளார்’ என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg