ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதியுடன் இணைவு!
This post was written by : Anojkiyan
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளார்.
திகாமடுலை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரமவே இவ்வாறு தனது ஆதரவினை ஜனாதிபதி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.