Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.தே.க.வின் வெற்றிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும்: இராதாகிருஸ்ணன்

In இலங்கை
Updated: 04:24 GMT, Dec 11, 2017 | Published: 03:27 GMT, Dec 11, 2017 |
0 Comments
1177
This post was written by : Anojkiyan

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயம் வெற்றிபெறும் எனவும் அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முக்கிய காரணமாக திகழும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அம்பேகமுவ பகுதிக்கான வீட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றது போல ஐக்கிய தேசிய கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் நாட்டின் மூன்றில் இரண்டு சபைகளையும் கைப்பற்றுவது நிச்சயம். அதற்கு முக்கிய காரணமாக மீண்டும் தமிழ் முற்போக்கு கூட்டணி திகழும்.

எதிர்கட்சியில் இருக்கின்றவர்களுக்கோ அல்லது வேறு சுயேட்சை குழுக்களுக்கோ வாக்களிப்பது எந்தவிதமான ஒரு பயனும் தராது. எனவே நாங்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு மீண்டும் ஆதரவை வழங்குவதன் மூலம் நாம் முழுமையான பயனை பெற்றுக் கொள்ள முடியும். எதிர்கால திட்டங்களில் நாங்கள் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டுமானால் எங்களுடைய உறுப்பினர்கள் தலைவர்களாக, உப தலைவர்களாக வர வேண்டும். இதன் மூலம் எமது அபிவிருத்தியை வேகமாக முன்னெடுக்க முடியும். அரசாங்க ஆதரவு இல்லாமல் நாம் எதனையும் செய்ய முடியாது” என கூறினார்.

aar

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg