Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் காயம்

In இலங்கை
Published: 03:43 GMT, Dec 11, 2017 |
0 Comments
1161
This post was written by : Anojkiyan
aar

ஏறாவூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள காளிகோயில் வீதி மற்றும் புகையிரத நிலைய வீதி சந்தியிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தின் போது காயமடைந்தவர்கள் இருவரும் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தை ஏற்படுத்திய மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பாடசாலை மாணவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg