Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் தொடரும் அட்டூழியம்: வாளுடன் வந்தவர்கள் பொலிஸார் மீது தாக்குதல்

In இலங்கை
Updated: 04:07 GMT, Dec 11, 2017 | Published: 04:07 GMT, Dec 11, 2017 |
0 Comments
1233
This post was written by : Anojkiyan

வவுனியாவில் வாளுடன் வந்த இருவர் போக்குவரத்து பணியில் இருந்த பொலிஸாரை தாக்கி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில், வவுனியா, தர்மலிங்கம் வீதி வழியாக வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றை போக்குவரத்து கடமையில் இருந்த இரு போக்குவரத்து அதிகாரிகள் மறித்துள்ளனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் போக்குவரத்து பொலிசாரை காலால் எட்டி உதைந்துள்ளார். இதையடுத்து பொலிசார் கீழே வீழ்ந்ததும் மோட்டர் சைக்கிளை வேகமாக செலுத்திய போது குறித்த மோட்டர் சைக்கிளில் பின்பக்கத்தில் இருந்தவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

எனினும் கீழே விழுந்தவர் தப்பியோடியுள்ளார். ஆனால் இதன்போது இரு வாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வீதியில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கெமராவை பரிசோதித்த போதும் அவர்களை அடையாளம் காண முடியாமல் போனதாக தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg