Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய சாதனையைப் படைத்தார் தோனி!

In கிாிக்கட்
Published: 03:59 GMT, Dec 11, 2017 |
0 Comments
2635
This post was written by : Puvanes
dhoni001

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் காப்பாளராக 16 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தர்மசாலாவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தோனி 65 ஓட்டங்களை குவித்தார்.

இந்த ஓட்டங்களுடன் அவர் விக்கெட் காப்பாளராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 என ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளிலும் மொத்தமாக 16048 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககார விக்கெட் காப்பாளராக 17840 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதுவே விக்கெட் காப்பாளர் ஒருவர் பெற்றுள்ள அதிக ஓட்ட எண்ணிக்கையாகும் அந்த வரிசையில் தோனிக்கு தற்போது இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இதேவேளை, நேற்றைய போட்டியில் 112 ஓட்டங்களை மட்டுமே முழு இந்திய அணியும் பெற்று கொண்டது. இதில் 65 ஓட்டங்களை தோனி தனிஒருவராக இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg